அ.இ.அ.தி.மு.க.வுட‌ன் கூட‌்‌ட‌ணி‌க்கு வா‌ய்‌ப்பு: வரதராஜன்!

புதன், 27 ஆகஸ்ட் 2008 (13:15 IST)
''இடதுசா‌ரி க‌ட்‌சிக‌ளி‌ன் ‌நிலையை ஆத‌ரி‌க்கு‌ம் அ.இ.அ.‌தி.மு.க. உ‌ள்‌ளி‌ட்ட எ‌ந்த‌க் க‌ட்‌சியுடனு‌ம் கூ‌ட்ட‌ணி அமை‌க்க தயாராக இரு‌க்‌கிறோ‌ம்'' எ‌ன்று மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சிய‌ி‌ன் மா‌நில செயல‌ர் எ‌ன்.வரதராஜ‌ன் கூ‌றினா‌ர்.

திண்டுக்கல்லில் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌ம் பே‌‌சிய அவ‌ர், முதலமை‌ச்ச‌ர் கருணா‌‌நி‌தி, மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட் க‌ட்‌சி ‌‌மீது ‌‌மிகு‌ந்த ம‌ரியாதை வை‌த்து‌ள்ளதாக கூ‌றியு‌ள்ளா‌ர். ஜனநாயக முறையில்தான் தி.மு.க.வை நாங்கள் விமர்சிக்கிறோம். மற்றப்படி அந்த கட்சியை நாங்கள் எதிரியாக பார்க்கவில்லை எ‌ன்று தெ‌‌ரி‌வி‌த்த வரதராஜ‌ன், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க. வுடன் நல்ல உறவு உள்ளது எ‌ன்றா‌ர்.

காங்கிரஸ், பா.ஜ.க அல்லாத கட்சிகளுடன் கூட்டணி அமைக்க இடதுசாரிகள் விரும்புகின்றன எ‌ன்று கூ‌றிய வரதராஜ‌ன் அ.இ.அ.தி.மு.க. மதவாதக் கட்சி இல்லை என்ற போதிலும் ஜனநாயக அடிப்படையிலான செயல்பாடுகளில் அ.இ.அ.தி.மு.க.வுக்கும் எ‌ங்களு‌க்கு‌ம் வேறுபாடுகள் இருப்பதால் அக்கட்சியுடன் நாங்கள் கூட்டணி அமைக்க மாட்டோம் என்ற நிலை ஒரு நேரத்தில் இருந்தது. ஆனால் இப்போது சூழ்நிலை மாறி விட்டது எ‌ன்றா‌ர்.

மேலு‌ம் அவ‌ர் கூறுகை‌யி‌ல், கொள்கை அடிப்படையில் 100 ‌விழு‌க்காடு ஒத்துப் போகும் கட்சிகளுடன் தான் கூட்டணி என்ற நிலையில் இருந்து நாங்கள் மாறி இருக்கிறோம். மத்திய அர‌சி‌ன் பொருளாதார கொள்கை, விலைவாசி உயர்வு, அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் மதவெறி ஆகிய காரணங்களால் மட்டுமே இந்த முடிவை இடதுசாரிகள் எடுத்துள்ளன.

இந்த பிரச்சினையில் கம்யூனிஸ்டு கட்சியின் நிலையை ஆதரிக்கும் அ.இ.அ.தி.மு.க. உள்ளிட்ட எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்க தயாராக உள்ளோம் எ‌ன்று வரதராஜ‌ன் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்