வ.உ.சி. வாரிசுக‌ள் த‌‌த்தெடு‌ப்பு: ஏ.சி.சண்முகம் அறிவிப்பு!

புதன், 27 ஆகஸ்ட் 2008 (11:33 IST)
வ.உ.சி.யின் வாரிசுகளை படிக்க வைத்து திருமணம் செய்து கொடுப்பதாக புதிய நீதிக்கட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார்.

இது குறித்து அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "வ.உ.சி. வாரிசுகளான வி.ஜி.தனலட்சுமி, வி.ஜி.ஆறுமுகம், வி.ஜி.சங்கரன், வி.ஜி.சோமசுந்தரம் ஆகியோருக்கு மதுரை, ராஜா பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு தர, அக்கல்லூரியின் தலைவர் நாகராஜன் ச‌ம்மத‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இவர்களுடைய 3 குழந்தைகளையும் பொறியியல் பட்டம் படிக்க வைத்து, திருமணம் செய்து வைக்கவும், இன்னும் திருமணம் ஆகாமல் உள்ள வி.ஜி.ஆறுமுகத்திற்கு திருமணம் செய்து வைக்கவும் தீர்மானித்து‌ள்ளே‌ன்.

இவர்களின் துன்பநிலையை கருதி, முதலமைச்சர் கருணாநிதி இவர்கள் 4 பேருக்கும் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். நாடாளுமன்ற வளாகத்தில் வ.உ.சி. உருவ சிலையை நிறுவ வேண்டும்.

நாடாளுமன்ற வளாகத்தில் வ.உ.சி. உருவ சிலையை உடனடியாக அமைத்திட மத்திய அரசை வலியுறுத்தி, செப்டம்பர் மாதம் 5ஆ‌ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்" எ‌ன்று ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்