168 த‌மிழக ‌மீனவ‌ர்க‌ள் ஆ‌ந்‌திரா‌வி‌ல் ‌சிறை‌ப்‌பிடி‌ப்பு!

செவ்வாய், 26 ஆகஸ்ட் 2008 (10:23 IST)
ஆந்திர எல்லை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த த‌மிழக மீனவர்கள் 168 பேரை, பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் சிறை பிடித்துச் சென்றது.

சென்னை காசிமே‌ட்டை சே‌ர்‌ந்த 119 மீனவர்கள் நேற்று முன்தினம் ஆந்திர மாநில கடல் எல்லை அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அ‌ங்கு‌ வ‌ந்த மர்ம கும்பல், மீனவர்களை மடக்கிப்பிடி‌த்து கரைக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். அவர்களுடைய 17 விசைப்படகுகளையும் அவர்கள் பறிமுதல் செ‌ய்தன‌ர்.

இதேபோல், ஆந்திர மாநிலம் சென்னார் பாளையம் கடல் எல்லை பகுதியிலும் ‌‌மீ‌ன்‌பிடி‌த்து‌க் கொ‌ண்ட 49 மீனவர்களையு‌‌ம், அவ‌ர்களது 7 விசைப்படகுகளுடன் மற்றொரு கும்பல் சிறைபிடித்தது.

த‌ங்க‌ள் வலைகளை சேத‌ப்படு‌த்த‌ி‌ய ‌மீனவ‌ர்க‌ள் தலா ரூ.40,000 செலுத்தினால்தான் ‌விடுவோ‌ம் எ‌ன்று‌ம் அ‌ந்ம‌ர்கு‌ம்ப‌லதகவல் அனுப்பி உள்ளது.

ம‌ர்ம கு‌ம்பலா‌ல் ‌பிடி‌த்து வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள மீனவர்களை விடு‌வி‌க்க விசைப்படகு உரிமையாளர்கள் ஆந்திரா செ‌ன்று‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்