சென்னை விமான நிலைய‌‌த்தை ந‌‌வீன‌ப்படு‌த்த 2 நிறுவனங்கள் தேர்வு!

சனி, 23 ஆகஸ்ட் 2008 (13:10 IST)
ரூ.1,808 கோடி‌யி‌ல் சென்னை விமான நிலையத்தை நவீனப்படுத்த இர‌ண்டு ‌நிறுவன‌ங்க‌ள் தே‌ர்‌வு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

முனைய கட்டடம் அமைக்கும் பணியை நிறைவேற்றிட கனடாவின் ஹெர்வ் போமர்லோ இன்டர்நேஷனல், சிசிசி நிறுவனமும், ஓடுபாதை அமைப்பதற்கு எஸ்.பி.சீனய்யா அண்டு கோ என்ற நிறுவன‌மு‌ம் தே‌ர்வு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன.

குறை‌ந்த செல‌வி‌ல் ‌தி‌ட்ட‌த்தை செய‌ல்படு‌த்த இந்த நிறுவனங்க‌ள் மு‌ன்வ‌ந்ததா‌ல் இவை தே‌ர்வு செ‌ய்ய‌ப்ப‌ட்டதாக இந்திய விமான நிலையங்கள் ஆணைய‌த்‌தி‌ன் செய்தித்தொடர்பாளர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

செ‌‌ப்ட‌ம்ப‌ர் 2வது வார‌த்த‌ி‌ல் இ‌ந்த திட்டங்களை நிறைவேற்றுவதற்கான உத்தரவு ஒப்படைக்கப்படு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்