வெடி குண்டு வீசிப்பார்ப்பதால் கூட்டம் பேசுவதைக் குறைத்துக் கொள்ளப் போவதில்லை என்றும் இப்பொழுது ஒலிப்பதைவிட குரல் இன்னும் அதிகமாகவே ஒலிக்கும் என்றும் லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசியல் என்று வந்து விட்டால் விமர்சனங்களை தாங்க வேண்டும். மாற்றுக் கட்சியினர் சொல்லும் கருத்துக்களை காதுகொடுத்து வாங்க வேண்டும்.
நான் உஙகளை விமர்சிக்கிறேன் என்றால் என்னையும் விமர்சித்து விட்டுப் போங்கள் நான் மேடை போட்டுப் பேசுகிறேன் என்றால் நீங்களும் மேடை போட்டு என்னைப் பற்றிப் பேசுங்கள். அதை விட்டு விட்டு தே.மு.தி.க.வினர் வன்முறைக்கு வழி வகுக்கிறார்களே இது எந்த விதத்தில் நியாயம்.
இப்படி அவர்கள் வெடி குண்டு வீசிப்பார்ப்பதால் கூட்டம் பேசுவதைக் குறைத்துக் கொள்ளப் போவதில்லை. இப்பொழுது ஒலிப்பதைவிட இன்னும் என் குரல் அதிகமாக ஒலிக்கும்" என்று விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.