ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் கோவில் பிரச்சினையை தீர்க்க ஆலோசனை தெரிவித்து இருப்பதாக முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அமர்நாத் கோவில் பிரச்சினை பற்றி நீங்கள் ஏதாவது ஆலோசனை சொல்லியிருக்கிறீர்களா என்று கேட்டதற்கு என்னுடைய ஆலோசனையை தெரிவிக்க வேண்டியவர்களிடம் தெரிவித்திருக்கிறேன் என்றார்.
தமிழகத்தில் கூட்டணியில் மாற்றம் ஏற்படும் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே என்று கேட்டதற்கு, அதுற்றி எனக்கு தெரியாது என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.