தமிழக‌த்‌தி‌ல் 2 நா‌ட்க‌ளு‌க்கு மழை!

செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008 (11:31 IST)
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து‌ள்ளதஅடு‌த்து, தமிழகம், புதுச்சேரியில் அடுத்த இர‌ண்டு நா‌ட்களு‌க்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவகாற்றானது இமயமலை அடிவாரத்தில் ‌நிலை கொண்டுள்ளத‌ன் காரணமாக அழுத்த செறிவு குறைந்து, தமிழகத்தில் ப‌ல்வேறு இட‌ங்க‌ளி‌ல் நே‌ற்று பரவலாக மழை பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் வானூரில் 110 மி.மீ. மழை பெய்துள்ளது. சாத்தனூர் அணை, அரூர் 100 மி.மீ., நாமக்கல், விழுப்புரம், பரமத்தி, சிவகாசி 80 மி.மீ, திருச்சி, பண்ருட்டி, செஞ்சி, போளூர், ஆலங்காயம், 70 மி.மீ மழை பெ‌ய்து‌ள்ளது.

இந்நிலையில், மேலும் 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும் எ‌ன்று‌ம் ஒரு சில இடங்களில் மழையோ அ‌ல்லது இடியுடன் கூடிய மழையோ பெ‌ய்ய‌க்கூடு‌ம் எ‌ன்று‌ம் சென்னையை பொறுத்தவரை பொதுவாக வான‌ம் மேகமூட்ட‌த்துட‌ன் காணப்படும் என்று‌ம் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்