கருணாநிதிக்கு சத்துணவு ஊழியர்க‌ள் ச‌ங்க‌ம் பாராட்டு!

சனி, 16 ஆகஸ்ட் 2008 (14:19 IST)
ச‌ம்பள உய‌ர்வு வழ‌ங்‌கிய முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌‌தி‌க்கு ச‌த்துணவு, அ‌ங்க‌ன்வாடி ஊ‌‌ழிய‌‌ர்க‌ள் ச‌ங்க‌ம் பாரா‌ட்டு தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளது.

சென்னை: சத்துணவு, அங்கன் வாடியில் பணியாற்றும் 2 லட்சத்து 20 ஆயிரம் ஊழியர்களுக்கு கால முறை ஊதியம் நிர்ணயம் செய்வதாகவு‌ம், தொகுப்பூதியம் பெற்று வருபவ‌ர்களு‌க்கு தனியாக புதிய ஊதிய விகிதம் நிர்ணயித்து இனி சம்பளம் வழங்கவும், அதற்கான அறிவிப்பு செப்டம்பர் 15ஆ‌ம் தேதி வெளியாகும் என்று முதலமைச்சர் சுத‌ந்‌திர‌தின‌‌த்த‌ன்று அ‌றி‌‌வி‌த்தா‌ர்.

இத‌ற்று ந‌ன்‌றி தெ‌ரி‌வி‌த்து த‌மி‌ழ்நாடு ஒரு‌ங்‌கிணை‌ந்த ச‌த்துணவு ப‌‌ணியாள‌‌ர் ச‌ங்க‌த் தலைவ‌ர் மு.வரதராஜன் கூறுகைய‌ி‌ல், தனிகாலமுறை ஊதியம், 10 ஆண்டு காலத்திற்கு பணி மூப்பு அடிப்படையில் ஊதிய உயர்வு, வழங்கிய முதலமை‌ச்சரு‌க்கு நன்றி தெரிவி‌‌த்து‌க் கொள்கிறேன் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

த‌மி‌ழ்நாடு ச‌‌த்துணவு ஊ‌ழிய‌ர் ச‌ங்க‌‌த் சே‌ர்‌ந்த பழனிநாதன் கூறுகை‌யி‌ல், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்திய முதலமைச்சருக்கு நன்றி. இந்த அறிவிப்பு சத்துணவு ஊழியர்களின் குடும் பங்களில் எல்லையில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது எ‌ன்று தெ‌ரிவ‌ி‌த்தா‌ர்.

அ‌ங்க‌ன்வாடி ஊ‌‌‌‌ழிய‌ர் உத‌வியாள‌ர் ச‌ங்க‌த்தை சே‌ர்‌ந்த தமிழரசி கூறுகை‌யி‌ல், பணி ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்களுக்கு இந்த ஓய்வூதியம் கிடைக்கும் வகையில் முன் தேதியிட்டு அமல்படுத்த வேண்டும் எ‌ன்று கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க‌த்தை சே‌ர்‌ந்த பழ‌னி‌ச்சா‌மி கூறுகை‌யி‌ல், நாங்கள் எதிர்பார்த்த காலமுறை ஊதியம் வழங்கப்படவில்லை. அமைப்பாளர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ. 2550, ரூ. 3550 என்ற விகிதத்தில் வழங்க வேண்டும் என்று கேட்டு வந்தோம்.

ஆனால் அது கிடைக்கவில்லை. ஆனாலும் சமையலர், உதவியாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்கியது வரவேற்க கூடியது. மாதாந்திர பென்சன் வழங்க வேண்டும் எ‌ன்று கே‌‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்