சென்னையில் சர்வதேச தரத்தில் பிரமாண்டமான நவீன நூலகம் கட்டப்படும் என்று சட்டபேரவையில் அரசு அறிவித்தது. அதன்படி, புதிய நூலகம் கட்டுவதற்காக சென்னை கிண்டி கோட்டூர்புரத்தில் 8 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் ரூ.120 கோடி செலவில் இந்த புதிய நவீன நூலகதத்தை சர்வதேச தரத்தில் அமைப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நூலகத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா, கோட்டூர்புரத்தில் உள்ள அரசு தகவல் தொகுப்பு மைய வளாகத்தில் இன்று மாலை 5 மணிக்கு நிதி அமைச்சர் அன்பழகன் தலைமையில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டுகிறார்.
இந்த நவீன நூலகம் 8 ஏக்கர் பரப்பில் 8 அடுக்குகளாக கட்டப்பட உள்ளது. அதிநவீன வசதிகள் பொருந்திய இந்த நூலகம் ஆசியாவிலேயே 2-வது மிகப் பெரிய நூலகமாகவும், தெற்காசியாவில் பெரிய நூலகமாகவும் விளங்கும்.