சென்னையில் சாலை ஓரங்களில் உள்ள கட்சி கொடிக் கம்பங்களால் பொது மக்களுக்கு எந்த இடையூறும் கிடையாது. எனவே கட்சி கொடிக் கம்பங்களை தமிழக அரசு அகற்றக் கூடாது என்று ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகரில் சாலை ஓரங்களில் உள்ள கொடி கம்பங்கள், கட்சிகளின் அறிவிப்பு பலகைகளை அகற்றி மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருவது கண்டனத்துக்குரியது.
சென்னையில் சாலை ஓரங்களில் உள்ள கட்சி கொடிகளாலோ, விளம்பர பலகையாலோ பொது மக்களுக்கு எந்த இடையூறும் கிடையாது. எனவே கட்சி கொடி கம்பம் விளம்பர பலகைகளை அகற்றுவதை கைவிட வேண்டும்'' என்று வைகோ கூறியுள்ளார்.