பள்ளி, கல்லூரிகளில் விளையாட்டுக்கு ஊக்கம்: சர‌த்குமா‌ர்!

புதன், 13 ஆகஸ்ட் 2008 (11:22 IST)
''பள்ளி, கல்லூரிகளில் விளையாட்டு வகுப்புகளை அதிகப்படுத்துதல், மாவட்ட, மாநில அளவில் பல்வேறு போட்டிகளை நடத்தி ஊக்கப்படுத்துதல் போன்ற திட்டங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்'' எ‌ன்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ''ஒலிம்பிக் துப்பாக்கி சுடும் போட்டியில் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது பெருமிதம் அளிக்கிறது.

இந்த வெற்றி வருங்காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் பெருமளவில் இளைஞர்கள் பங்கேற்று பதக்கங்கள் குவிப்பதற்கான எழுச்சியை உருவாக்கியுள்ளது.

எனவே, மத்திய அரசு தகுந்த பயிற்சி அளித்து, ஒலிம்பிக் போட்டிகளில் பல தங்கங்களை பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். கிரிக்கெட், ஹாக்கி, கால்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு தனியார் நிறுவனங்கள் ஆதரவளிக்க முன்வர வேண்டும்.

பள்ளி, கல்லூரிகளில் விளையாட்டு வகுப்புகளை அதிகப்படுத்துதல், மாவட்ட, மாநில அளவில் பல்வேறு போட்டிகளை நடத்தி ஊக்கப்படுத்துதல் போன்ற திட்டங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். நாட்டுக்கு மிகப்பெரும் கவுரவத்தை பெற்றுத் தந்த அபினவ் பிந்த்ராவுக்கு பாராட்டுகளை தெ‌ரி‌வி‌த்து‌க் கொ‌ள்‌கிறே‌ன் எ‌ன்று சர‌த்குமா‌‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்