சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணி அடுத்த மாதம் தொடங்கும்: பிரபுல் படேல் தகவல்

திங்கள், 11 ஆகஸ்ட் 2008 (18:54 IST)
சென்னை விமான நிலைய விரிவாக்கப்பணிகள் செப்டம்பர் மாதம் தொடங்கும் என மத்திய விமான போக்குவரத்து‌த் துறை அமைச்சர் பிரபுல் படேல் கூ‌றியு‌ள்ளா‌ர்.

புது ில்லியில், மத்திய விமானப் போக்குவரத்து துறை தொடர்பான பாராளுமன்ற ஆலோசனைக்குழு கூட்டம் மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் பிரபுல் படேல் தலைமையில் இன்று நடந்தது.

இ‌ந்த கூட்டத்தில் அவ‌ர் ேசுகை‌யி‌ல், "சென்னை, கொல்கத்தா விமான நிலைய விரிவாக்கம் தொடர்பான விளக்க அறிக்கை மத்திய அர‌சி‌ன் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசு ஒப்புதல் கிடைத்ததும் விரிவாக்கப் பணிகள் 2008ஆ‌ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கும்" எ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்