‌பி‌ந்‌த்ராவு‌க்கு த‌மிழக அரசு சா‌ர்‌பி‌ல் ரூ.5 ல‌‌ட்ச‌ம் ப‌ரிசு: கருணா‌நி‌தி அ‌றி‌வி‌ப்பு!

திங்கள், 11 ஆகஸ்ட் 2008 (18:17 IST)
சீனாவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி‌ச் சுடும் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ள இந்திய வீரர் அபினவ் பிந்த்ராவுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.5 லட்ச‌ம் ப‌ரிசு வழ‌ங்க‌ப்படுவதாக முதலமைச்சர் கருணா‌நி‌தி அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து த‌மிழக அரசு வெ‌‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌‌ல், "சீனத் தலைநகர் ‌பீ‌ஜிங் நகரில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான துப்பாக்கி சுடும் பிரிவில் இந்திய வீரர் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் வென்று ஒரு மிகப் பெரிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

இதுவரை நடைபெற்றுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் தனி நபர் பிரிவில் இந்தியா தங்கம் பதக்கம் பெற்றதில்லை. அதுமட்டுமல்லாமல் கடந்த 28 ஆண்டுகளில் நடைபெற்றுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா எந்த ஒரு பிரிவிலும் தங்கப் பதக்கம் பெற்றதில்லை. இக்குறைகளை நீக்கி, தனிநபர் பிரிவில் முதன்முறையாக அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் பெற்று ஒரு புதிய வரலாற்றைப் படைத்துள்ளார்.

துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளதன்வாயிலாக இந்தியாவுக்குப் பெருமைத் தேடி தந்து வரலாறு படைத்துள்ள அபினவ் பிந்த்ராவு‌க்கு பாராட்டுகளையும் வா‌ழ்த்துகளையும் தெரிவித்துள்ளதுடன், அவருக்குத் தமிழக அரசின் சார்பில் ரூ.5 ல‌ட்ச‌ம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் கருணா‌நி‌தி அறிவித்துள்ளார்" எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்