மாணவர்கள் போரா‌ட்ட‌த்தை ஜனநாயக முறை‌யி‌ல் அரசு எ‌தி‌ர் கொ‌‌ள்ள வே‌ண்டு‌ம் : வரதராஜ‌ன்!

திங்கள், 11 ஆகஸ்ட் 2008 (11:16 IST)
''தனியார் மயத்தை எதிர்த்து மாணவர்கள் போராடும் போது அதை ஜனநாயக முறையில் அரசு எதிர்கொள்ள வேண்டும்'' எ‌ன்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் என்.வரதராஜன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ''தஞ்சையில் செயல்பட்டு வரும், சாஸ்திரா நிகர்நிலை பல்கலைக்கழகம், தனியார் சட்டக் கல்லூரி தொடங்க உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது. அதை கண்டித்து சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுத்து அந்த முயற்சியை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

இதுகுறித்து, போராட்டம் நடத்திய நெல்லை சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது காவ‌ல்துறை‌யின‌ர் தடியடி நடத்தியுள்ளனர். கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் ஆகியோர் கடுமையாக காயம் அடைந்துள்ளனர். கல்லூரிக்குள் புகுந்தும் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் 8 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காவல் துறையின் இச்செயலை வன்மையாக கண்டிக்கிறோம். தனியார் மயத்தை எதிர்த்து மாணவர்கள் போராடும் போது அதை ஜனநாயக முறையில் அரசு எதிர்கொள்ள வேண்டும்'' எ‌ன்று வரதராஜன் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்