சைக்கோ கொலையில் 4 பேரை ‌பிடி‌த்து ‌தீ‌விர ‌விசாரணை!

வியாழன், 7 ஆகஸ்ட் 2008 (13:18 IST)
சைக்கோ கொலைகள் தொடர்பாக 4 பேரை ‌பிடித்து, காவ‌ல்துறை‌யின‌ர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

சென்னை வடபழனியில் காவலா‌ளி பெரியசாமி, கடந்த ஜூன் 24ஆம் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து பலர் மர்மமான முறையில் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டனர்.

மேற்கு மாம்பலத்தில் கடந்த மாதம் 14ம் தேதி ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டார். இந்த கொலைகளை ‘சைக்கோ’ ஆசாமி செய்வதாக கூறப்பட்டது. இதை‌த் தொட‌‌ர்‌ந்து அ‌ந்த பகுதியில் தனிப்படையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் சைதாப்பேட்டை அய்யாவு நகரை சேர்ந்த சுப்பு, வெள்ளை நாகராஜ், கோடம்பாக்கம் காமராஜ் காலனியை சேர்ந்த ராஜேஷ், கருப்பு நாகராஜ் ஆகியோர் ஒன்றாக சுற்றுவது தெரிய வந்தது. அவர்களை காவ‌ல்துறை‌யின‌ர் ‌தீ‌விரமாக கண்காணிக்க ஆரம்பித்தனர். அவர்கள் இரவு நேர‌த்‌தி‌ல் கஞ்சா அடித்துக் கொண்டு பணத்துக்காக சாலையில் இருப்பவர்களை தாக்குவது தெரிந்தது.

இதையடு‌த்து அவர்கள் 4 பேரையும் தனிப்படை காவ‌‌ல்துறை‌யின‌ர் ‌பிடி‌‌த்து ‌‌தீ‌விரமாக ‌விசாரணை நட‌த்‌தின‌ர். அ‌ப்போது, மேற்கு மாம்பலத்தில் ஒருவரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.

காவ‌ல்துறை‌யின‌ரிட‌ம் அவ‌ர்க‌ள் அ‌ளி‌த்த வா‌க்குமூல‌த்‌தி‌ல், இரவில் படம் பார்த்துவிட்டு சாலையில் படுத்திருப்பவர்களை தாக்கி பணத்தை பறிப்போம். மேற்கு மாம்பலத்தில் சாலையில் படுத்திருந்த வாலிபர் பணம் தரமறுத்ததால் அவரை, காலால் மிதித்தோம்.

அப்போது, சுவரில் தலை மோதி, அவர் பலியானார். அருகில் ஆயில் கேன் கிடந்தது. அதை எடுத்து அவர் மீது ஊற்றி தீ வைத்து விட்டு சென்றோம் எ‌ன்று தெரிவித்துள்ளனர்.

சென்னையில் நடந்த தொடர் சைக்கோ கொலைகளிலும் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று காவ‌ல்துறை‌யின‌ர் சந்தேகிக்கின்றனர். எனினும், அதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்காததால், 4 பேரையும் கைது செய்யாமல் விசாரித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்