கோபியில் ரூ.1.5 கோடியில் தானியங்கி பட்டு நூல் நூற்பு நிலையம்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

புதன், 6 ஆகஸ்ட் 2008 (12:38 IST)
ஈரோடு மாவட்டம் கோபியில் ரூ.1.5 கோடி செலவில் தானியங்கி பட்டுநூல் ூற்பு நிலையம் அமைக்கப்படும் என மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

இது குறித்து ஈரோட்டில் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் அவ‌ர் கூறுகை‌யி‌ல், ஈரோடு மாவட்டம் கோபி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றது முதல் இதுவரை சுமார் ரூ.7.5 கோடி மதிப்புள்ள திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்னும் ஆறு மாதங்களில் பலகோடி திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

பல இடங்களில் கூடுதல் பள்ளிகட்டிடம், சமுதாய கூடங்கள் என அனைத்து தரப்புக்கும் பயன்படுமாறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது. கோபி பகுதியில் பட்டுபுழு விசவாயம் அதிகமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு கோபியில் ரூ.1.5 கோடி செலவில் தானியங்கி பட்டு நõல் நõற்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது.

இதேபோல் கொடிவேரி அணை சீரமைக்கப்பட்டு சிறந்து சுற்றுலா தளமாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறேன். சத்திசாம்ராஜ்நகர் ரயில் திட்டத்திற்கு வனத்துறை அனுமதி வழங்கவில்லை. ரயில் வருவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் வனவிலங்குகளுக்கு எந்த விதத்தில் பாதிப்பு ஏற்படாது என்கிற உண்மைகளை கூறி ரயில் திட்டம் நிறைவேற அனுமதிவழங்குமாறு ரயில்வே அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ளது எ‌ன்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்