க‌ச்ச‌த்‌தீவை ‌மீ‌ட்க கருணா‌நி‌தி நடவடி‌க்கை: பு‌திய த‌மிழக‌ம் கிருஷ்ணசாமி வ‌லியுறு‌த்த‌ல்!

புதன், 6 ஆகஸ்ட் 2008 (09:42 IST)
''அனைத்துக் கட்சிகள் அடங்கிய குழுவுடன் டெ‌‌ல்லிக்குச் சென்று கச்சத் தீவை மீட்க முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தலைமைச் செயலாளர், காவல் துறைத் தலைவர் ஆகியோர் சார்பாக பதில் மனு தாக்கல் செய்த தமிழக அரசு வழக்கறிஞர்கள், முதல்வர் கருணாநிதி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யாதது ஆச்சரியமாக இருக்கிறது.

மத்திய சட்டத் துறை இணை அமைச்சராக தி.ு.க.வைச் சேர்ந்த வேங்கடபதி இருக்கும்போது இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக தமிழக சட்ட அமைச்சர் துரைமுருகன் மீது முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கச்சத் தீவை மீட்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் குரல் கொடுத்துள்ளன. இந்த அரிய சந்தர்ப்பத்தை தமிழக அரசு நழுவவிடக் கூடாது. அனைத்துக் கட்சிகள் அடங்கிய குழுவுடன் டெ‌‌ல்லிக்குச் சென்று கச்சத் தீவை மீட்க முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் எ‌ன்று ‌கிரு‌ஷ்ணசா‌மி கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்