தி.மு.க.வில் விரைவில் இணைவோம் என்று போட்டி ம.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் எல்.கணேசன் கூறினார்.
தஞ்சைவூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற கட்சி தலைமை பொறுப்பிலிருந்து என்னை நீக்க, நாடாளுமன்றத்திற்கு வெளியே இருக்கும் வைகோவுக்கு அதிகாரம் இல்லை.
நாடாளுமன்ற கட்சி கூட்ட முடிவின்படி, பிரதமர் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிப்பது என்று நானும், செஞ்சிராமச்சந்திரனும் முடிவெடுத்தோம்.
தி.மு.க.வில் இணைவது குறித்து நானும், செஞ்சி ராமச்சந்திரனும் முதல்வர் கருணாநிதியை விரைவில் சந்தித்து இதுபற்றி பேசுவோம். அவர் சொல்லும் நாளில், அவர் சொல்லும் இடத்தில் தி.மு.க.வுடன் இணைவோம். எங்களுடன் இருப்பவர்கள் அந்த முடிவை ஏற்பார்கள் என்று எல்.கணேசன் கூறினார்.