செய்யூரில் அல்ட்ரா மின் உற்பத்தி திட்டம்: தமிழக அரசு உறுதி!

செவ்வாய், 5 ஆகஸ்ட் 2008 (18:57 IST)
தமிழகத்தில் செய்யூரில் அல்ட்ரா மெகா மின் உற்பத்தி திட்டத்தை தொடங்க மத்திய அரசிடம் தமிழக அரசு உறுதி செய்துள்ளது.

தமிழகம், மகாராஷ்டிரா, ஒரிசா மாநிலங்களில் தலா ஒரு அல்ட்ரா மெகா மின் உற்பத்தி நிலையம் அமைப்பதன் மூலம் 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இதற்கான பணிகள், இதர மின் திட்டங்களை விரைவுபடுத்தும் வகையில் மத்திய மின்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தலைமையில் ில்லியில் உயர்நிலைக் கூட்டம் நடந்தது.

இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல் பே‌சிய த‌மிழக ‌மி‌ன்சார‌த் துறை அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌வீராசா‌மி, தமிழகத்தின் செய்யூரில் அல்ட்ரா மெகா மின் உற்பத்தி திட்டத்தை தொடங்கலாம் என்று தெரிவித்தார். மேலு‌ம் கடலூரில் 2-வது அல்ட்ரா திட்டத்தை தொடங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். அதற்கான நிலம் பற்றிய விவரங்களை விரைவில் அனுப்புவதாகவும் கூ‌றினார்.

12,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் நோக்குடன் தொடங்கப்படும் இத்திட்டங்களை முழு வீச்சில் செயல்படுத்துமாறு அ‌ப்போது அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்