நெடு‌ஞ்சாலை‌த்துறை ஒ‌ப்ப‌ந்த‌ப்பு‌ள்‌ளி‌‌யி‌ல் முறைகேடு நட‌க்க‌வி‌ல்லை: த‌மிழக அரசு!

செவ்வாய், 5 ஆகஸ்ட் 2008 (16:55 IST)
''நெடு‌ஞ்சாலை‌த்துறை‌யி‌ல் ஒப்பந்தப்புள்ளிகளை திரும்பப் பெற்றுக் கொ‌ள்வ‌தி‌ல் எ‌வ்‌வித தவறு‌ம், முறைகேடு‌ம் ஏ‌‌ற்பட‌வி‌ல்லை'' எ‌ன்று த‌‌மிழக நெடு‌‌ஞ்சாலை‌த்துறை தலைமை‌ப் பொ‌றியாள‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌‌ர்.

இது தொட‌ர்பாக த‌‌மிழக நெடு‌‌ஞ்சாலை‌த்துறை தலைமை‌ப் பொ‌றியாள‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், ''பழைய முறைப்படி ஒப்பந்தப் படிவங்களை நேரி‌ல் பெற்றுக் கொள்ள விரும்பும் ஒப்பந்ததாரர்கள் அதற்கான கட்டணத்தை அலுவலகத்தில் செலுத்தி படிவங்களை பெற்றுக் கொண்டும் ஒப்பந்தப்புள்ளியில் கலந்து கொள்ளலாம் என்ற முறையும் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

எனவே, துறையிலிருந்து நேரடியாக படிவங்கள் பெறுபவர்களிடம் மட்டும் ஒப்பந்தப்புள்ளிகளுக்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் எவ்வித குறைபாடுகளோ, முறைகேடுகளோ ஏற்படுவதில்லை.

மேலும், ஒப்பந்தப்புள்ளிகளுக்கான படிவங்களை கணினி மூலமாக நகலெடுத்துக் கொண்டாலும், அலுவலகங்களிலிருந்து நேரடியாக பெற்றுக் கொண்டாலும் ஒப்பந்தப் படிவங்களை சமர்ப்பிப்பவர்கள் முன்வைப்புத் தொகை அவசியம் செலுத்த வேண்டுமென்ற நிபந்தனை தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதில் எந்தவித மாற்றமும் செ‌ய்யப்படவில்லை.

எனவே முன்வைப்புத் தொகை பெறாமலே பலருக்கு வேலை வழங்கப்படுகிறது என பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள செ‌ய்‌தி முற்றிலும் தவறானதும், உண்மைக்குப் புறம்பானதுமாகும்.

ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்தப்புள்ளிகளை துறைக்கு சமர்ப்பித்த பின்னர் முறையான காரணங்களின் அடிப்படையில் ஒப்பந்தப்புள்ளிகள் அடங்கிய உறையினைத் திறக்கும் முன்பாகவே தாங்கள் சமர்ப்பித்த ஒப்பந்தப்புள்ளிகளை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு விதிமுறை ஏற்கனவே உள்ளன.

அதே நடைமுறை தற்போதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதிலும் எவ்வித தவறும், முறைகேடும் ஏற்படவில்லை. எனவே, தவறான தகவல்களின் அடிப்படையில் இந்த செ‌ய்தி வெளியிடப்பட்டுள்ளது'' எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்