சிறுமியை கொலை: வாலிபருக்கு தூக்கு- மதுரை நீதிமன்றம் தீர்ப்பு!
செவ்வாய், 5 ஆகஸ்ட் 2008 (11:03 IST)
webdunia photo
FILE
10 வயது சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த வழக்கில் வாலிபருக்கு தூக்கு தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மதுரை, அனுப்பானடியைச் சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் யோகநாதனை (9) கடந்த 2006ம் ஆண்டு செல்வம் என்பவர் கட்டாயப்படுத்தி ஹோமோ செக்சில் ஈடுபடுத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதேபோல் கடந்த 2006ஆம் ஆண்டு மதுரை, ஜெய்ந்த்புரத்தை சேர்ந்த மணிவாசகம் என்பவது மகள் நாகசாந்தியை (10) பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்தான் செல்வம். பின்னர் அந்த சிறுமியின் உடலை சாக்குமூடையில் கட்டி டிவி அட்டைப்பெட்டிக்குள் போட்டு மறைத்துவிட்டு, காவல்நிலையத்தில் சரணடைந்தான்.
இந்த கொலை வழக்கு விசாரணை மதுரை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எப்சிபாய், கொடூரமான முறையில் 2 பேரை கொலை செய்துள்ள வாலிபர் செல்வத்துக்கு அதிகபட்ச தண்டனை வழங்கும்படி கோரினார்.
இதை கேட்ட நீதிபதி சித்தார்த்தர் அளித்த தீர்ப்பில், வழக்கில் குற்றச்சாட்டுகளை செல்வம் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. சிறுமியை கொடூரமாக கொலை செய்த குற்றத்துக்காக பிரிவு 302ன்படி சாகும் வரை தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. மரண தண்டனையை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஒப்புதல் பெற்று நிறைவேற்ற உத்தரவிடுகிறேன் என தீர்ப்பளித்தார்.