உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் மனு தா‌க்க‌ல் செ‌ய்யாத அரசு வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் நீக்கம்!

செவ்வாய், 5 ஆகஸ்ட் 2008 (10:02 IST)
உச்நீதிமன்ற வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்க தவறிய இர‌ண்டு அரசு வழ‌க்க‌றிஞ‌ர்களை முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி ‌நீ‌க்‌கி உ‌ள்ளா‌ர்.

இது தொடா‌ர்பாக த‌மிழக அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், ''உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் கேள்வி எழுப்பிய தகவல் குறித்து, முதல்வர் கருணாநிதி விசாரித்தறிந்தார். டெல்லியில் பணியாற்றும் தமிழக அரசின் வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்காததுதான் இதுபோன்ற சூழல் ஏற்படக் காரணம் என முதல்வருக்கு தெரிய வந்தது.

இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் உரிய காலத்தில் பதில் மனு தாக்கல் செய்யாத, இந்தத் தகவலை கவனத்துக்கு கொண்டு வராத உச்ச நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டுள்ள தமிழக அரசு வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் வி.ஜி.பிரகாசம், டி.ஹரிஷ்குமார் ஆகியோர் பதவி விலகிட வலியுறுத்தப்பட்டுள்ளனர்'' எ‌ன்று கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்