சென்னையில் நடைபெறும் தொடர் கொலைகளை தடுக்கத்தவறியதாகக் கூறி தி.மு.க. அரசைக் கண்டித்து அ.இ.அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
அதன்படி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று காலை அக்கட்சியின் அரசியல் ஆலோசகரும், மூத்த தலைவருமான பொன்னையன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏராளமான அ.இ.அ.தி.மு.க தொண்டர்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற தி.மு.க. அரசு தவறிவிட்டதாக அப்போது குற்றம் சாட்டினர்.
முந்தைய அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில், சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. விலைவாசிகள் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் மின்சாரம் தடை செய்யப்படுகிறது"என்று குற்றம்சாற்றினார்.