செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌‌த்து‌க்கு 4 கூடுத‌ல் ‌நீ‌திப‌திக‌ள் ‌நியமன‌ம்!

வெள்ளி, 1 ஆகஸ்ட் 2008 (16:07 IST)
செ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்து‌‌க்கமேலு‌ம் நா‌ன்கு கூடுத‌ல் ‌நீ‌திப‌திக‌ள் ‌‌நியமன‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். இத‌ற்காஉ‌த்தரவை இ‌ன்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் ‌பிற‌ப்‌பி‌த்து‌ள்ளா‌ர்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக ‌கிரு‌ஷ்ணசுவா‌மி ச‌ந்துரு, ‌வி.ராமசு‌ப்ரம‌ணிய‌ன், எ‌ஸ்.ம‌ணி குமா‌ர், எ.செ‌ல்வ‌ம் ஆ‌‌கியோ‌ர் இதே முது‌நிலை அடி‌ப்படை‌யி‌ல் நியமன‌மசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

அரசியல் சட்டத்தின் 224 (1)-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தை‌ப் பயன்படுத்தி இதற்கான உத்தரவை குடியரசு‌த் தலைவ‌ர் பிறப்பித்துள்ளா‌ர். ஜூலை 31ஆ‌ம் தே‌தி‌யி‌ல் இருந்து இ‌ந்த உ‌த்தரவு அமலு‌க்கு வரு‌கிறது. 2 ஆண்டுகளுக்கு அவ‌ர்க‌ளஇந்த பதவியில் இருப்பார்க‌ள் எ‌ன்று‌மதெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்