தேசிய நினைவுச் சின்னமாக ராமர் பாலத்தை அறிவிக்க வேண்டும்: ராம கோபாலன்!
வியாழன், 31 ஜூலை 2008 (09:52 IST)
''தேசிய நினைவுச் சின்னமாக ராமர் பாலத்தை அரசு அறிவிக்க வேண்டும்'' என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன் கூறியுள்ளார்.
சேது சமுத்திரத் திட்டத்தை விட ராமர் பாலத்தை உடைக்க அரசு அதிக ஆர்வம் காட்டி வருகிறது என்று கூறிய அவர், யார் ஆட்சிக்கு வந்தாலும் ராமர் பாலத்தை உடைக்க அனுமதிக்க மாட்டோம் என்றார்.
சேது கால்வாய் பணிகள் 60 விழுக்காடு முடிந்துவிட்டதாக அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறுகிறார். ஆனால், ராமர் பாலம் பகுதியில் எந்தப் பணியும் நடக்கவில்லை என்று திட்டத் தலைவர் சுரேஷ் சொல்கிறார். எது உண்மை, எது பொய் எனத் தெரியவில்லை என்று ராமகோபாலன் கூறியுள்ளார்.
வெடிகுண்டு வைப்பவர்களை அரசு கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்திய ராமகோபாலன், மீண்டும் பொடா சட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.