தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் சகோதரி நாகம்மாள் அவர்களது மகள் கமலாதேவிக்கு முதல்வர் கருணாநிதி ரூ.2.5 லட்சம் நிதியுதவி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
வாரப் பத்திரிகை ஒன்றில் அவர் கொடுத்திருந்த பேட்டியைப் படித்துப் பார்த்த முதலமைச்சர் கருணாநிதி, கமலாதேவியின் உடனடி மருத்துவச் செலவுகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் அனுமதித்து இன்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 1.5 லட்சம் ரூபாயை தமிழ்நாடு மின் நிதிக் கழகத்தில் நிரந்தர வைப்புத் தொகையாக முதலீடு செய்து, அதனால் கிடைத்திடும் வட்டித் தொகையின் மூலமாக மாதம்தோறும் அவருக்கு 1,000 ரூபாய் கிடைக்கவும் வழிவகை செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.