நகர்ப்புற பகுதிகளில் மின் தடை தளர்த்தப்பட்டது: தமிழ்நாடு மின்சார வாரியம்!

செவ்வாய், 29 ஜூலை 2008 (09:42 IST)
தென்மேற்கு பருவமழை சற்று தீவிரம் அடைந்துள்ளதா‌ல் தமிழகத்தின் மின் தேவை குறைந்ததால் நகர்ப்புற பகுதியில் மின் தடையை த‌மி‌ழ்நாடு ‌மி‌ன்சாரவா‌ரிய‌ம் தளர்த்தி உ‌ள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''தமிழக‌த்‌தி‌ல் பொதுவாக ூன் மாதத்தில் தொடங்க வேண்டிய தென் மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கியதால் மின் தேவைக்கும், மின் கையிருப்புக்கும் இடையே 1,000 மெகாவாட் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதே நிலைமை தமிழகத்தின் அண்டை மாநிலங்களிலும் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழக மின்வாரியம் தனது பயனீட்டாளர்களுக்கு மின் விநியோகம் செய்வதில் சிரமங்கள் ஏற்பட்டது. மின் பயனீட்டாளர்களுக்கு, சிரமங்களை குறைத்து அவர்களுக்கு மின் விநியோகத்தை முறைப்படுத்துவதற்கு ‌ின்வாரியம் எடுக்க வேண்டிய ஒழுங்குமுறை நடவடிக்கைகளை பற்றி அமை‌ச்ச‌ர் அறிவுரை வழங்கினார். இதை‌த் தொட‌ர்‌‌ந்து கடந்த மாத‌ம் 21ஆ‌ம் தே‌தி முதல் மின்வாரியத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதனால் கட‌ந்த 21ஆ‌ம் தே‌தி முதல் அறிவிக்கப்படாத மின்வெட்டு தமிழகத்தில் இல்லை.

மேற்கண்ட காலத்தில் காற்றாலையில் இருந்து பெறப்பட்ட மின்சாரத்தின் அளவு தொடர்ச்சியாக நன்றாக இருந்தது. மேலும் கடந்த மாத‌ம் 25ஆ‌ம் தே‌தி முதல் தென்மேற்கு பருவமழை சற்று தீவிரம் அடைந்துள்ளது. இதன்காரணமாக தமிழகத்தின் மின் தேவை குறைந்ததால் தமிழ்நாடு மின்சார வாரியம் நகர்ப்புற பகுதியில் மின் தடையை தளர்த்தியது.

மேலும் தொழிற்சாலைகளுக்கான வாராந்திர விடுமுறையை தவிர இதர மின் தடைகள் கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் தற்காலிகமாக தளர்த்தப்பட்டன.

நீலகிரி மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதன் காரணமாக மின் நிலைமை சீரடைய தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் தொழிற்சாலைகளுக்கான வாராந்திர விடுமுறை மின் நிலையில் கணிசமான முன்னேற்றம் வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்.

மின் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு நிலைமையில் முன்னேற்றம் வருவதை பொறுத்து மின் தடை மேலும் தளர்த்தப்படும்'' எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்