பெங்களூருவில் நடைபெற்ற மனிதாபிமானமற்ற கொடூரமான குண்டு வெடிப்பு நிகழ்வுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி. தங்கபாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் தீவிரவாதிகளின் தாக்குதல் நடைபெறக்கூடும் என்றும், அம்மாநில அரசு விழிப்போடு இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்ததை சுட்டிக்காட்டிய தங்கபாலு, கர்நாடக அரசு விழிப்போடு இருந்திருந்தால் இக்கோரச் நிகழ்வுகள் நடைபெறாமல் தடுத்திருக்க முடியும் என்று கூறியுள்ளார்.
தீவிரவாதம் எங்கே துளிர் விட்டாலும், அதை நசுக்கி ஒழித்திட மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று அறிவித்துள்ளத்தை குறிப்பிட்டுள்ள தங்கபாலு, மக்களின் அமைதி வாழ்க்கையை இனிமேலாவது பாதுகாக்க அம்மாநில அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.