கருணாநிதி டெல்லி பயணம்!

புதன், 23 ஜூலை 2008 (11:22 IST)
முதலமைச்சர் கருணாநிதி இன்று காலை 10 ம‌ணி‌க்கவிமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செ‌‌ன்றா‌ர். அவர் அங்கு பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி ஆகியோரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வாக்கெடுப்பில் வெற்றிபெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதி இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செ‌‌‌ன்றா‌ர்.

அவருடன் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, வேலு ஆகியோர் செல்கிறார்கள். இந்த விமானம் பகல் 12.40 மணிக்கு டெல்லி போய் சேர்கிறது. டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி ஆகியோரை சந்தித்து வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதற்காக வாழ்த்து தெரிவிக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்