க‌‌ச்ச‌த்‌தீவை ‌மீ‌ட்க நாடாளும‌‌ன்ற‌த்‌தி‌ல் த‌ீ‌ர்மான‌ம்: ராமதாஸ் வ‌‌லியுறு‌த்த‌ல்!

புதன், 9 ஜூலை 2008 (10:04 IST)
''முதலமைச்சர் கருணா‌நி‌தி, பிரதமருடன் பேசி கச்சத்தீவை மீட்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்'' என்று பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதாஸ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

ராமநாதபுரத்தில் பா.ம.க. மகளிர் அணி சார்பில் மது ஒழிப்பு மாநா‌ட்டி‌ல் கல‌ந்து கொ‌ண்ட அ‌க்க‌ட்‌சி ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌ம் கூறுகை‌யி‌ல், த‌மிழக‌‌ம் மது விற்பனையால் 4 தலைமுறைகள் பாழ்பட்டு தற்போது 5-வது தலைமுறை சீரழிந்து வருகிறது. இதற்கு ஒரே தீர்வு பூரண மதுவிலக்கை அமல்படுத்தவேண்டும்.

தமிழக அரசு மதுவிற்பனையை இலக்கு வைத்து ஊக்கப்படுத்துகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 47-வது பிரிவு, மது விற்பனையை ஊக்கப்படுத்த கூடாது என்று கூறுகிறது. இந்த சட்டத்தை பயன்படுத்தி தமிழக அரசு மீது உச்சநீதிமன்றத்தில் பா.ம.க. வழக்கு தொடுக்க உள்ளது.

எந்த ஒரு இந்திய மீனவனுக்கும் தென்பகுதியில் ‌சி‌றில‌ங்காவா‌ல் தொந்தரவோ, ஆபத்தோ ஏற்பட்டால் இந்தியா அதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது, நேரடி நடவடிக்கையில் இறங்கும் என ‌சி‌றில‌ங்காவு‌க்கு கடும் எச்சரிக்கைவிட வேண்டும். மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண கச்சத்தீவை மீட்க வேண்டும். இதில் அனைத்து கட்சிகளும் உறுதியாக உள்ளன.

இதை பயன்படுத்தி முதலமைச்சர், பிரதமருடன் பேசி கச்சத்தீவை மீட்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தமிழக மீனவர் பிரச்சினையில் சர்வ கட்சிகள் அடங்கிய குழு டெல்லி சென்று நிரந்தர தீர்வு கண்ட பிறகுதான் திரும்பவேண்டும்.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சியில் நீடிக்கும். வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. அல்லாத காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமைந்தால் அதில் பா.ம.க. இணைந்து செயல்படும் எ‌ன்று ராமதா‌ஸ் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்