அயல் நாட்டினர் தமிழகத்தில் நிலம் வாங்கத் தடையா?: அரசு விளக்கம்!
ஞாயிறு, 6 ஜூலை 2008 (13:11 IST)
தமிழகத்தில் நிலம், வீடு முதலிய சொத்துகளை அயல் நாட்டினர் வாங்குவது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், சிறிலங்கா அகதிகள் தமிழகத்தில் சொத்து வாங்குவதை அனுமதிக்க இயலாது என்பது போல் தவறான பொருள் தரும் வகையில் சில பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்தியர் அல்லாதவர் இந்தியாவில் சொத்து வாங்குவது குறித்த விதிமுறை இந் தியா முழுவதும் நடைமுறையில் உள்ளது. இந்திய அரசின் அசை யாச் சொத்து மேலாண்மை, கைய கப்படுத்துதல், மாற்றம் பற்றிய ஒழுங்குமுறை ஆகியன நடைமுறை யில் உள்ளன.
பாகிஸ்தான், வங்கதேசம், சிறிலங்கா, ஆப்கானிஸ்தான், சீனா, ஈரான், நேபாளம் அல்லது பூடான் ஆகிய எந்த நாட்டின் குடியுரிமை பெற்றவரும் ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி பெறாமல் இந்தியாவில் அசையாச் சொத்துகளை வாங்கவோ, விற்கவோ கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அசையாச் சொத்துகளை வாங்குவதற்கும் அல்லது விற்பதற்கும் இந்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் சட்டதிட்டங்கள் மற்றும் ஆணைகளின்படி செயல்படவேண்டும் என்பது இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது'' என்று கூறப்பட்டுள்ளது.