அடையா‌றி‌ல் ரூ.50 லட்சம் செலவில் சுற்றுச்சூழல் பூங்கா!

புதன், 2 ஜூலை 2008 (16:16 IST)
அடையா‌று ஆ‌ற்‌றி‌ன் கரை‌யி‌ல் ரூ.50 ல‌ட்ச‌ம் செல‌வி‌ல் சு‌ற்று‌ச்சூழ‌ல் பூ‌ங்கா அமை‌‌க்கு‌ம் ப‌ணியை அமைச்சர் துரைமுருகன் இ‌ன்று து‌வ‌க்‌கி வைத்தார்.

பொதுப்பணித்துறை‌யி‌ன் 150-ம் ஆண்டு நிறைவு ‌விழாவையொ‌ட்டி அடையாறு ஆற்றின் கரையில் கோட்டூர்புரத்தில் ரூ.50 ல‌ட்ச‌ம் செல‌வி‌ல் 5 ஏக்க‌‌ரி‌ல் பல அரிய வகை மரங்கள் கொ‌ண்ட பூ‌ங்கா அமை‌க்க திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பூங்காவினைச் சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைத்தல், அடையாற்றின் தெற்கு கரையில் கருங்கற்களினால் பாதுகாப்பு அமைத்தல், பூங்காவின் உள்புறம் செல்லும் மழைநீர் கால்வாயினை நீட்டித்து சீரமைத்தல், பூங்காவின் உபயோகத்திற்காக கைபம்புகள் அமைத்தல், பூங்காவின் உள்பகுதியில் மண் இட்டு சமன் செய்து நடைபாதைகள் அமைத்தல்.

பூங்காவினுள் இரு இடங்களில் நடைபாலம் அமைத்தல், பூங்காவினுள் மருத்துவ குணம் நிறைந்த மகிழம் பூ, மருது, புன்னை, மந்தாரை, மலை வேம்பு போன்ற மரக்கன்றுகள் நட்டு பாதுகாத்தல் ஆகிய பணிகள் நடைபெற உள்ளன.

இப்பூங்கா அமைக்கும் பணியினை அமை‌ச்ச‌ர் துரைமுருகன், மேயர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் மரக்கன்று நட்டு இ‌ன்று தொட‌ங்‌கி வை‌த்தன‌ர் எ‌ன்று அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்