‌வீடு க‌ட்ட 100 மூ‌ட்டை சிமெண்ட் : தமிழக அரசு!

சனி, 28 ஜூன் 2008 (16:06 IST)
புதிய வீடு கட்ட 100 மூட்டை வரை சிமெண்ட் தேவைப்படுவோருக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்டட வரைபடத்திற்குப் பதிலாக குடும்ப அட்டையின் அடிப்படையில் சிமெண்ட் வழங்கப்பஉள்ளதஎ‌ன்று த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இது தொட‌ர்பாக த‌‌மிழக அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், அரசு நிர்ணயித்துள்ள அடக்க விலையான மூட்டை ஒன்று ரூ.200 விலையில் 2008, ஜனவ‌ரி 21ஆ‌ம் முதல் பொதும‌க்களு‌க்கு நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின்படி இதுவரை ஒரு லட்சத்து 54,340 மெட்ரிக் டன் சிமெண்ட் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கிடங்குகள் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

2008, ஜூ‌ன் 26ஆ‌ம் தே‌தி நிலவரப்படி கிடங்குகளில் 8,371 மெட்ரிக் டன் உள்நாட்டு சிமெண்ட் கையிருப்பு உள்ளது. கிடங்குகளில் சிமெண்‌ட் இருப்பு குறைவாக இருக்கும் பட்சத்தில் அந்தந்த மண்டல மேலாளர்கள் சிமெண்ட் உற்பத்தியாளர்களிடம் தேவையான சிமெண்டினை உட னுக்குடன் பெற்று இருப்பு வைத்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

எந்த ஒரு கிடங்கிலும் பொதுமக்களுக்கு உள் நாட்டு சிமெண்ட் வழங்கப்படுவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை.

மேலும் பொதுமக்கள் நலன் கருதி சிமெண்‌ட் விற்பனையை அதிகரிக்க எவ்வித ஆவணமும் இன்றி வீட்டுப்பராமரிப்பு பணிகளுக்காக 50 மூட்டை சிமெண்ட், மற் றும் புதிய வீடு கட்ட 100 மூட்டை வரை சிமெண்ட் தேவைப்படுவோருக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்டட வரைபடத்திற்குப் பதிலாக குடும்ப அட்டையின் அடிப்படையில் சிமெண்ட் வழங்கப்படவும் உள்ளது. இந்நிலையில் இன்றைய நாளேடு ஒன்றில் சிமெண்ட் விற்பனை நிறுத்தம் என செய்தி வெளியிடப்பட்டுள்ளது உண்மைக்கு மாறானதாகும் எ‌‌ன்று த‌‌மிழக அரசு செ‌ய்‌‌தி‌க்கு‌றி‌‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்