ப‌ல்லட‌த்‌தி‌ல் ரூ.1,500 கோடி‌யி‌ல் பு‌திய தொ‌ழி‌ற்சாலை: கருணா‌நி‌தி மு‌ன்‌னிலை‌யி‌ல் ஒ‌ப்ப‌ந்த‌ம்!

சனி, 28 ஜூன் 2008 (13:50 IST)
கோவை மாவ‌ட்ட‌ம் ப‌ல்லட‌த்‌தி‌ல் ரூ.1,500 கோடி ுதலீட்டில் காற்றாலை கியர்பாக்ஸ் தயாரிக்கும் புதிய தொழிற்சாலை முதலமைச்சர் கருணா‌நி‌தி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ‌இ‌ன்று கையெழுத்தானது.

பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஹேன்சன் டிரைவ்ஸ் நிறுவன‌‌‌‌ம் கோவை மாவட்டம் பல்லட‌த்‌தி‌ல் அமைந்துள்ள சுஸ்லான் உள்கட்டமைப்பு சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் காற்றாலை கியர்பாக்ஸ்கள் தயாரிக்கும் தொழிற்சாலையினைச் சிறப்புப் பொருளாதார மண்டல அமைப்பில் ஏற்படுத்திடத் திட்டமிட்டுள்ளது.

இத்தொழிற்சாலையின்மூலம் ஹேன்சன் டிரைவ்ஸ் நிறுவனம் ஐந்தாண்டு கால அளவில் ரூ.1,500 ோடி அளவுக்கு முதலீடுகளைச் செ‌ய்யும். 800 பேருக்கு நேரடி வேலைவா‌ய்ப்புகளையும், 200 பேருக்கு மறைமுக வேலைவா‌ய்ப்புகளையும் அளிக்கும்.

இத‌ற்கான பு‌ரி‌ந்துண‌ர்வு ஒ‌ப்ப‌ந்த‌ம் முதலமைச்சர் கருணா‌நி‌தி முன்னிலையில் இ‌ன்று செ‌ன்னை தலைமை செயலக‌த்‌தி‌ல் நடைபெ‌ற்றது. இ‌ந்த ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல் தமிழக அரசின் சார்பாக தொழில்துறைச் செயலாளர் எம்.எப். ஃபரூக்கியும், ஹேன்சன் டிரைவ்ஸ் நிறுவனத்தின் சார்பாக அத‌ன் இயக்குநர் இவன்ப்ரம்சும் கையெழுத்திட்டனர் எ‌ன்று த‌‌மிழக அரசு வெ‌ளி‌யி‌‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்