கன்னியாகுமரி, ராமேஸ்வரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இன்று கடலில் சீற்றம் அதிகமாகவே காணப்பட்டது.
தனுஷ்கோடி, மண்டபம், முகுந்த ராயர்சத்திரம் பகுதியில் வழக்கத்தை விட 40 கி.மீ. வேகத்துக்கு பலத்த காற்று வீசியது. இதனால் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. ராட்சத அலைகள் மேலெழும்பி வண்ணம் இருக்கிறது.
கடல் சீற்றம் தொடர்ந்து ஏற்பட்டு வருவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதி இவர்களை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
கன்னியாகுமரியில் நேற்று இரவு கடல் சீற்றம் அதிகமாகவே இருந்தது. 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு அலைகள் ஆக்ரோஷமாக எழும்பியது. கடற்கரையில் இருந்த கட்டுமரங்கள், படகுகளை அலை இழுத்துச் சென்றது.