மரு‌த்துவ‌ர்களை பாதுகா‌‌க்க ச‌ட்ட‌ம்: த‌மிழக அரசு!

சனி, 28 ஜூன் 2008 (10:08 IST)
த‌மிழக‌த்‌தி‌ல் மரு‌த்துவ‌ர்க‌ள், ஊ‌ழிய‌ர்க‌ள் தா‌க்க‌ப்படுவதை கரு‌த்‌தி‌ல் கொ‌ண்டு ஆ‌ந்‌திரா‌வி‌ல் உ‌ள்ளதுபோ‌ல் த‌மிழக‌த்‌‌திலு‌ம் ச‌ட்ட‌ம் கொ‌ண்டு வர அரசு ப‌‌ரி‌சீ‌லி‌க்கு‌ம் எ‌ன்று அமை‌ச்ச‌ர் ப‌ன்‌னீ‌‌ர் செ‌ல்வ‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர்.

பொன்னேரியில் அரசு மரு‌த்துவரை தா‌க்‌கிய வழக்கறிஞர்களை கைது செய்ய வலியுறுத்தியும், மரு‌த்துவ‌ர்க‌ளி‌ன் பாதுகாப்புக்கு சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியும் புற நோயாளிகள் சிகிச்சைப் போராட்டத்தை தமிழ்நாடு அரசு மரு‌‌த்துவ சங்கத்தின் நே‌ற்று தொட‌ங்‌கின‌ர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து மருத்துவர்கள் பாதுகாப்புச் சட்டம் தமிழகத்தில் கொண்டுவருவது குறித்து அரசு பரிசீலிக்கும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், பொன்னேரி அரசு மருத்துவமனையில், மருத்துவர்கள் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக, மருத்துவர்கள் பாதுகாப்புச் சட்டம் இயற்ற டாக்டர்கள் கோரிக்கை வைத்தனர்.

தமிழகத்தில் மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மீது அவ்வப்போது நடைபெறும் தாக்குதலைக் கருத்தில் கொண்டு, ஆந்திர மாநிலத்தில் இயற்றப்பட்டது போல், தமிழகத்திலும் இதுபோன்ற சட்டம் கொண்டுவர அரசு பரிசீலிக்கும்.

மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொள்ளும் என்று அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியுள்‌ளா‌ர்.

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வ‌‌த்‌தி‌ன் உறுதியைத் தொடர்ந்து போராட்டத்தை கை‌விடுவதாக மரு‌த்துவ ச‌ங்க‌ம் அறிவி‌த்து‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்