இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், மகாராஷ்டிராவில் பயிலும் குஜராத்தி மற்றும் கன்னட மாணவர்கள் தங்களது தாய்மொழியிலேயே தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், தமிழ் மாணவர்கள் மட்டும் அனுமதிக்கப்படவில்லை.
குறிப்பிட்ட சில நிர்வாக காரணங்களால், தமிழில் தேர்வு எழுத அனுமதிக்கப்படாமல் போனாலும்கூட, அந்த மாணவர்களின் நலனைக் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
ஏழு ஆண்டுகளாக தமிழ் வழியில் பயின்றுவிட்டு, திடீரென ஆங்கிலத்தில் தேர்வு எழுதுவது என்பது கடினத்தையும், பல்வேறு மன அழுத்தத்தையும் மாணவர்களுக்கு ஏற்படுத்திவிடும்.
துவக்கப்பள்ளிகளில் தாய்மொழியிலேயே கல்வி கற்பது சிறந்தது என்பதைக் கருத்தில் கொண்டு, அம்மொழியிலே தொடரவும், தேர்வு எழுதவும் அனுமதிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ் பாட புத்தகங்கள் தேவையிருந்தாலும், தமிழ் ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருந்தாலும், மும்பை மாநகராட்சிக்கு உதவுதற்கு தமிழக அரசு உதவு தயாராக இருக்கிறது. தமிழ் மாணவர்கள் தங்களது தாய்மொழியிலேயே எட்டாம் வகுப்பு வரை படிப்பதற்கான முழு உதவிகளையும் வழங்க அரசு தயாராக இருக்கிறது என்று முதல்வர் கருணாநிதி கடித்தத்தில் கூறியுள்ளார்.