ஒரகடத்தில் ரூ.300 கோடியில் புதிய தொழிற்சாலை: கருணாநிதி முன்னிலையில் ஒப்பந்தம்!

வியாழன், 26 ஜூன் 2008 (13:29 IST)
நோக்கியா சீமென்ஸ் நெட்வொர்க்ஸ் ‌நிறுவன‌ம் ஒரகடத்தில் ரூ.300 கோடியில் புதிய தொழிற்சாலை அமை‌க்‌கிறது. இத‌ற்கான பு‌ரி‌ந்து‌ண‌ர்வு ஒ‌ப்ப‌ந்த‌ம் முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி‌யி‌ல் மு‌ன்‌னிலை‌யி‌ல் இ‌ன்று நடைபெ‌ற்றது.

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த நோக்கியா சீமென்ஸ் நெட்வொர்க் நிறுவனம் மொபைல் தயாரிப்புக்கான சாதனங்கள் மற்றும் நிலையான தகவல் உள்கட்டமைப்புக்கான சாதனங்களைத் தயாரிப்பதற்கும், இதர பல்வேறு மின்னணு வன்பொருள்களுக்கான சாதனங்களைத் தயாரிப்பதற்கும், சென்னைக்கு அருகில் ஒரகடத்தில் உள்ள சிப்காட் உயர் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலத்தில் சிறப்பு பொருளாதார மண்டல அமைப்பில் தொழிற்சாலை ஒன்றினை அமைக்க திட்டமிட்டுள்ளது.

இத் தொழிற்சாலையின் மூலம் நோக்கியா சீமென்ஸ் நெட்வொர்க்ஸ் நிறுவனம் மூன்றாண்டுகளுக்குள் 300 கோடி ரூபாய் முதலீட்டில் ஏறத்தாழ 400பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 100 பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பையும் அளிக்கும்.

இ‌ந்த புதிய தொழிற்சாலையை அமைப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்த‌ம் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி மு‌ன்‌னிலை‌யி‌ல் தமிழக அரசின் சார்பாக தொழில்துறை செயலாளர் எம்.எப்.பரூக்கி, நோக்கியா சீமென்ஸ் நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் சார்பாக அந் நிறுவனத்தின் இயக்குனர் சுரேஷ்வாத்வானியும் கையெழுத்திட்டனர் எ‌ன்று அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்