அரசு ஒதுக்கீட்டுக்கு 65‌விழு‌க்காடு இடங்க‌ள் கொடுக்க தயார்: சுயநிதி கல்லூரிகள் கூட்டமைப்பு!

வியாழன், 26 ஜூன் 2008 (10:57 IST)
பொ‌றி‌யிய‌ல் மாணவர் சேர்க்கையில் அரசு ஒதுக்கீட்டுக்கு 65 ‌விழு‌க்காடு இடங்களை கொடுக்க தயார் என்றும் ஆனால் அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மாட்டோம் என்றும் த‌மி‌ழ்நாடு சுயநிதி கலை அறிவியல், தொழில் கல்லூரிகள் கூட்டமைப்பு தலைவர் ஜேப்பியார் கூ‌றினா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் அவ‌ர் செ‌ய்‌தியா‌ள‌ர்களு‌க்கு அ‌‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், ஜுன் 26-ந் தேதி அன்று அரசும் கன்சார்டியமும் சேர்ந்து பொ‌றி‌யிய‌ல் மாணவர் சேர்க்கைக்கு 65:35 இட ஒதுக்கீட்டுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்போவதாக செய்தி அறிந்தேன். எங்களுக்கு இதுவரை எந்த தகவலும் வரவில்லை.

அதுமட்டுமல்ல நாங்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியாத நிலை உள்ளது. காரணம் இடஒதுக்கீட்டு பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் நிலுவையில் உள்ளது. வழக்கு ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் இருக்கும்போது எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடுவது சரியல்ல.

ஆனால் அதே நேரத்தில் இப்போது அண்ணா பல்கலைக்கழகம் ரேங்க் பட்டியலை வெளியிட்டுள்ளது. கவுன்சிலிங் ஏற்பாடுகள் அனைத்தையும் செய்துவிட்டது. மாணவர்கள் நலனை கருதியும் முதலமைச்சர் கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்றும் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் முடிவு தெரியும் வரை கடந்த ஆண்டுபோல இந்த ஆண்டும் அரசுக்கு 65 ‌விழு‌க்காடு இடங்களை கொடுக்க சம்மதம் என்பதை அறிவிக்கிறோம். ஆனால் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மாட்டோம் எ‌ன்று கூ‌றினா‌ர் ஜே‌ப்‌பியா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்