நாடாளும‌ன்ற தே‌ர்தலை வ‌லிமையோடு ச‌ந்‌தி‌க்க வே‌ண்டு‌ம் : திருமாவளவ‌ன்!

வெள்ளி, 20 ஜூன் 2008 (16:49 IST)
நாடாளுமன்ற பொதுத்தேர்தலை தி.மு.க. கூட்டணி அதே வலிமையோடு சந்திக்க வேண்டு மென்பதஎ‌ங்களது ‌விரு‌‌ப்ப‌ம் எ‌ன்று ‌விடுதலை ‌ச‌ிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் தொ‌ல்.‌திருமாவளவ‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

ஜனநாயக மு‌ற்போ‌க்கு கூ‌ட்ட‌ணி‌‌யி‌ல் இரு‌ந்து பா.ம.க.வை தி.மு.க. வெ‌ளியே‌ற்‌றியதை தொட‌ர்‌ந்து ‌மீ‌ண்டு‌ம் ‌தி.மு.க கூ‌ட்ட‌ணி‌யில் இணைக்க முதலமைச்சர் கருணாநிதியையும், மரு‌த்துவ‌ர் ராமதாசையும் இ‌ன்று ‌தொ‌ல்.‌திருமாவளவ‌ன் சந்தித்து பே‌சினா‌ர்.

இ‌ந்த ச‌ந்‌தி‌ப்பு ‌பி‌ன்ன‌ர் அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், தி.மு.க. கூட்டணி வலிமையோடு தொடர வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில், தி.மு.க.வுக்கும் பா.ம.க.வுக்கும் இடையில் தற்போது ஏற்பட்டுள்ள `கசப்பை' சரி செய்ய வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் மனப்பூர்வமாக விரும்பி, சில முன் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் அடிப்படையில், இன்று (20ஆ‌ம் தே‌தி) முதல்வரை நேரில் சந்தித்து எமது விருப்பத்தையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டோம். அதனைத் தொடர்ந்து பா.ம.க. நிறுவனரையும் நேரில் சந்தித்துப் பேசியுள்ளோம். எமது முயற்சிக்கு நல்ல விளைவு கிட்டும் என்று பெரிதும் நம்புகிறோம். அத்துடன், தி.மு.க. கூட்டணியிலுள்ள இடதுசாரி கட்சிகளின் தலைவர்களையும் இது தொடர்பாக நேற்று சந்தித்துப் பேசியுள்ளோம்.

எதிர் வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலை தி.மு.க. கூட்டணி அதே வலிமையோடு சந்திக்க வேண்டுமென்பது விடுதலைச் சிறுத்தைகளின் விருப்பமாகும். தி.மு.க- பா.ம.க.வும் இம் முயற்சிக்கு ஒத்துழைக்குமென நம்புகிறோம் எ‌ன்று தொ‌ல்.‌திருமாவளவ‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்