பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "இந்த ஆண்டு பட்ஜெட், தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது" என கூறினார்.
மகளிர் நலன், தொழில் முன்னேற்றம், இளைஞர்களுக்கான உயர்தொழில்நுட்ப வசதிகள், தொழிற்பூங்காக்கள், புதிய நகரங்கள், புதிய விமான நிலையங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் அதிவேக ரயில் சேவையை உருவாக்கும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
"எல்லோர்க்கும் எல்லாம்" என்ற உயரிய நோக்கில், தமிழ்நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் நிதித்துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துகள்" எனவும் முதலமைச்சர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.