ராமதாஸ் மீது ம.பு.க. விசாரணை: சுப்பிரமணியசுவாமி!

சனி, 14 ஜூன் 2008 (13:56 IST)
ரா‌‌ஜீ‌வ் கா‌ந்‌தி கொலை வழ‌க்‌கி‌ல் தொட‌ர்புடையதாக கூற‌ப்படு‌ம் ப‌த்மநாபனை ச‌ந்‌தி‌த்து பே‌சிய ராமதா‌‌சிட‌ம் ம.பு.க. ‌விசாரணை நட‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசுவாமி வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், சேது சமுத்திர திட்டம் சவப்பெட்டியில் இருக்கிறது. இந்த திட்டத்தை ரத்து செய்து விட்டதாக மத்திய அரசு அடுத்த மாதம் அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறது. சேது சமுத்திர திட்டத்துக்கு மாற்று திட்டமாக கொல்கத்தாவில் இருந்து தூத்துக்குடி வரை சரக்கு ரயில் பாதை அமைக்க வேண்டும்.

விலைவாசி உயர்வுக்கு கச்சா எண்ணை விலை உயர்வே காரணம் என்று மத்திய அரசு கூறுகிறது. 1 லிட்டர் பெட்ரோலுக்கு உற்பத்தி செலவு ரூ.22 தான். மீதி எல்லாமே வரியாகத்தான் வசூலிக்கப்படுகிறது. இந்த வரியை குறைத்தாலே பெட்ரோல் விலையை கனிசமாக குறைக்க முடியும். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ரூ.25க்கு பெட்ரோல் விற்பதற்கு ஏற்பாடு செய்வேன்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக பத்மநாபனை தேடி ம‌த்‌‌திய புலனா‌ய்வு கழக‌‌த்‌தின‌ர் (சி.பி.ஐ.) ஜெர்மனிக்கு சென்றுள்ளனர். ஆனால் கடந்த ஜனவரி 9ஆ‌ம் தேதி பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், ஜி.கே. மணி, திருமாவளவன் ஆகியோர் தாய்லாந்து சென்று பத்மநாபனை சந்தித்து இருக்கிறார்கள்.

விமான நிலையத்தில் விடுதலைபுலிகள் அவர்களை வரவேற்றும் இருக்கிறார்கள். இதற்கான புகைப்பட ஆதாரம் என்னிடம் இருக்கிறது. எனவே இதுகுறித்து ராமதாசிடம் ம.பு.க விசாரணை நடத்த வேண்டும் எ‌ன்று சு‌ப்‌பிரம‌ணியசுவா‌மி கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்