புதிய சட்ட‌ப்பேரவை: முத‌ல்வ‌ர் நாளை அடிக்கல் நாட‌்டு‌கிறா‌ர்!

புதன், 11 ஜூன் 2008 (17:26 IST)
புதிசட்ட‌ப்பேரவை கட்டடத்துக்கு முதல்வரகருணாநிதி நாளை அடிக்கலநாட்டுகிறார்.

சென்னை புனித ஜார்ஜ்கோட்டையில் ராணுவத்துக்கு சொந்தமான இடத்தில் வாடகை கட்டடத்தில் தமிழக அரசு தலைமை செயலகமும், சட்ட‌ப்பேரவை கடடடமும் இயங்கி வருகிறது. இந்த இடம் போதுமானதாக இல்லாததால் அரசு துறை அலுவலகங்கள், அமைச்சகங்கள் இட நெருக்கடியில் இயங்குகின்றன.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் தி.மு.க. அரசு பதவி ஏற்றதும் அரசினர் தோட்டத்தில் உள்ள இடத்தில் புதிய சட்ட‌ப்பேரவை கடடடம் கட்ட முடிவு செய்தது.

இதைத் தொடர்ந்து அரசினர் தோட்டத்தில் புதிய சட்ட‌ப்பேரவை கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை (12ஆ‌ம் தே‌தி) மாலை 5 மணிக்கு அரசினர் தோட்டம் எதிரில் உள்ள ராஜாஜி மண்டபத்தில் நடைபெறுகிறது.

முதலமைச்சர் கருணாநிதி புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டு‌கிறா‌ர். விழாவுக்கு அவை‌த் தலைவ‌ர் ஆவுடையப்பன் தலைமை தாங்குகிறார். அமைச்சர் அன்பழகன் முன்னிலை வகிக்கிறார். முன்னதாக அமைச்சர் துரைமுருகன், வரவேற்று பேசுகிறார். முடிவில் தலைமை செயலாளர் திரிபாதி நன்றி கூறு கிறார்.

புதிய கட்டடத்தில் சட்ட மன்ற கூட்ட அரங்கம், நூலகம், தலைமை செயலகம், முதலமைச்சர் அலுவலகம், அமைச்சர்கள் அலுவலகம், அரசு துறைகளுக்கான அலுவலகங்களும் அமைக்கப்படு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்