‌விலைவா‌சி உய‌ர்வை குறை‌க்க ம‌த்‌‌திய அரசை முத‌ல்வ‌ர் வ‌லியுறு‌த்த வே‌ண்டு‌ம்: வரதராஜ‌ன்!

செவ்வாய், 10 ஜூன் 2008 (17:13 IST)
அனை‌த்து ம‌க்களு‌ம் பா‌தி‌க்காத வகை‌யி‌ல் ‌‌விலைவா‌சி உய‌ர்வை குறை‌க்க ம‌த்‌திய அர‌சை முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி வ‌லியுறு‌த்த வே‌ண்டு‌ம் மா‌ர்‌க்‌‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌‌‌யி‌ன் மா‌நில செயலாள‌ர் வரதராஜ‌ன் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளன‌ர்.

செ‌ன்னை கோபாலபுர‌த்‌தி‌ல் முத‌‌ல்வ‌ர் கருணா‌நி‌தியை மா‌‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் மா‌நில செயலாள‌ர் எ‌ன்.வரதராஜ‌ன், மா‌‌நில‌ங்களவை உறு‌ப்‌பின‌ர் டி.கே.ர‌ங்கராஜ‌ன், ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் பாலபார‌தி ஆ‌கியோ‌ர் இ‌ன்று ச‌ந்‌தி‌த்து பே‌சினா‌ர்.

பி‌ன்ன‌ர் மா‌நில செயலாள‌ர் வரதராஜ‌ன் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌ம் கூறுகை‌யி‌ல், ‌விலைவா‌சி உய‌ர்வை க‌ட்டு‌ப்படு‌த்த ம‌த்‌திய அரசை முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி வ‌லியு‌றுத்த வே‌ண்டு‌ம் எ‌ன்று கே‌ட்டு‌க் கொ‌ண்டோ‌ம்.

மா‌ர்‌‌க்‌சி‌‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் கூ‌றிய மா‌ற்று வ‌‌‌‌ழியை ‌ம‌த்‌திய அரசு ‌பி‌ன்ப‌ற்ற முத‌ல்வ‌ர் வ‌லியுறு‌த்த வே‌ண்டு‌ம். எ‌ங்க‌ள் மா‌ற்று வ‌ழியை ம‌த்‌‌திய அரசு ‌நிறைவே‌ற்‌றினா‌ல் ‌விலைவா‌சி க‌‌ட்டு‌ப்படு‌த்த‌ப்படு‌ம்.

விலைவா‌‌சி உய‌ர்வை ம‌த்‌‌திய அரசு க‌ட்டு‌ப்படு‌த்த தவ‌றினா‌ல் அத‌ன் ‌விளைவுகளை ச‌ந்‌தி‌ப்பா‌ர்க‌‌ள் எ‌ன்றா‌ர் வரதராஜ‌ன்.

வெப்துனியாவைப் படிக்கவும்