ஒரகட‌த்‌தி‌ல் ரூ.2000 கோடி‌யி‌ல் தொழிற்சாலை : கருணாநிதி முன்னிலையில் ஒப்பந்தம்!

திங்கள், 9 ஜூன் 2008 (13:08 IST)
செ‌ன்னை அருகே ஒரகட‌‌த்த‌ி‌‌ல் ரூ.2,000 கோடி‌யி‌ல் போ‌ட்டோ வோ‌ல்டா‌ய்‌க் தொ‌ழி‌ல்நு‌ட்ப தொ‌‌ழி‌ற்சாலை அமை‌ப்பத‌ற்கான பு‌ரி‌ந்துண‌ர்வு ஒ‌ப்ப‌ந்த‌ம் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி மு‌ன்‌னிலை‌யி‌ல் இ‌‌ன்று கையெழு‌த்தானது.

இது குறித்து தமிழக அரசு இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், மோசர்பேயர் என்ற தொழில் நிறுவனம், நினைவாற்றல் சாதனங்கள், யு.பி.எஸ். டிரைவ்ஸ் போன்ற பொருள்களின் தயாரிப்பில் உலகின் புகழ்பெற்ற ஒரு முன்னணி நிறுவனமாகும்.

இந்நிறுவனம், சென்னைக்கு அருகே ஒரகடம் சிப்காட் உயர் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் சிலிகான் அடிப்படையிலான போட்டோவோல் டாய்க் பொருள்களையும், நேனோ தொழில்நுட்பம் அடிப்படையிலான பொருள்களையும், நினைவாற்றல் சாதனங்கள் போன்றவைகளையும் தயாரிக்கும் தொழிற்சாலையை ரூ.2000 கோடி‌க்கு‌ம் மேற்பட்ட முதலீட்டில் நிறுவுவதற்குத் திட்டமிட்டுள்ளது.

இத்தொழிற்சாலை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏறத்தாழ 3,000 பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும். மோசர் பேயர் தொழிற்சாலையும் அமைவதன் மூலம் சென்னை மின்னணு வன்பொருள் தயாரிப்பு மற்றும் போட்டோ வோல்டாய்க் பொருள்கள் தயாரிப்பில் முக்கிய மையமாக உருவெடுக்கும்.

இத்தொழிற்சாலையை அமைப்பதற்காக முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு சார்பில் தொழில்துறைச் செயலாளர் எம்.எஃப்.பரூக்கி, மோசர் பேயர் நிறுவனத்திற்காக, மோசர் பேயர் இந்தியா தொழிற்சாலையின் தலை வர் மற்றும் நிர்வாக இயக்குநர் தீபக்பூரி கையொப்பமிட்டனர்.

அ‌ப்போது மத்திய அமை‌ச்ச‌ர் ஆ.ராசா, தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி, நிதித்துறைச் செயலாளர் ஞானதேசிகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்