ஓ‌ட்ட‌ல் உணவுக‌ளி‌ன் ‌விலை 10 ‌லிரு‌ந்து 15 ‌விழு‌க்காடு குறை‌ப்பு: த‌மிழக அரசு!

திங்கள், 2 ஜூன் 2008 (19:10 IST)
த‌மிழக‌த்‌தி‌லஉ‌ள்ஓ‌ட்ட‌ல்க‌ளி‌ல் ‌வி‌ற்க‌ப்படு‌மஉணவு‌பப‌ண்ட‌ங்க‌ளி‌ன் ‌விலநாளமுத‌‌ல் 10 ‌லிரு‌ந்து 15 ‌விழு‌க்காடவரகுறை‌க்க‌ப்படு‌மஎ‌‌ன்றத‌மிழஅரசஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இதுகு‌றி‌த்து‌தத‌‌மிழஅரசஇ‌ன்றவெ‌ளி‌யி‌ட்டு‌ள்செ‌ய்‌தி‌ககு‌றி‌ப்‌பவருமாறு:

தமி‌ழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் இன்று (2.6.2008) பிற்பகல் 12.00 மணியளவில் உணவு அமைச்சர் எ.வ.வேலகலந்தா‌ய்வநடத்தினார்.

இ‌க்கூட்டத்தில் மதிய உணவு மற்றும் இட்லி, தோசை போன்ற பொருட்களின் விலையை குறைக்க ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் ஒ‌ப்பு‌ககொ‌ண்டு‌ள்ளது.

நடுத்தர உணவகங்களில் தற்சமயம் 2 இட்லி ரூ.8.00, சாதா தோசை ரூ.15.00, வடை ஒன்று ரூ.8.00, பொங்கல் ரூ.15.00, கிச்சடி ரூ.15.00 மற்றும் ஒரு கப் டீ ரூ.8.00 ஆகிய விலைக்கு மேல் விற்கப்படும் உணவகங்களில் தற்போதுள்ள விலையில் 10 ‌விழு‌க்கா‌ட்டி‌லஇரு‌ந்து 15 ‌விழு‌க்காடவரை குறை‌க்க‌ப்படு‌ம். சாதம் 250 கிராம் சாம்பார், ரசம், மோர், கூட்டு, பொரியல், ஊறுகாயுடன் அளவு சாப்பாடு ரூ.20க்கு வழங்கப்படும்.

இந்த விலைகளுக்கு கீ‌ழ் ஏற்கனவே விற்பனை செ‌ய்துவரும் உணவகங்களில் தொடர்ந்து அதே குறைந்த விலையில் உணவு பண்டங்கள் வழங்க‌ப்படு‌ம்.

3.6.2008 அன்று முதலமைச்சர் கலைஞர் பிறந்த நாள் முதல் மேற்கண்ட உணவு பண்டங்களின் விலை குறை‌ப்பு நடைமுறை‌க்கு வரு‌ம்.

மேற்கண்டவாறு ஓட்டல் பண்டங்களின் விலைகளை குறைக்க அனைத்து ஓட்டல் உரிமையாளர்களும் ஒரு மனதாக ஏற்றுக்கொள்வது என்றும் இவ்வாறு விலை குறைக்கப்படுவதால் உணவுப் பண்டங்களின் தரம், எடை, ருசி போன்ற எதுவுமே குறைக்கப்பட மாட்டாது என்றும், குறைக்கப்பட்ட விலைப் பட்டியல் வாடிக்கையாளர்கள் பார்வைக்கு நன்கு தெரியும்படி வைக்கவும், ஓட்டல் உரிமையாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்த கலந்தா‌ய்வகூட்டத்தில் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் வசந்தபவன் ஓட்டல் உரிமையாளர் ஆ.ரவி, செயலர் சு.சீனிவாசன், அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன் மற்றும் இதர சங்க நிர்வாகிகளும் பங்கு பெற்றனர்.

இ‌வ்வாறு அ‌தி‌ல் கூற‌ப்‌பட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்