‌விலைவா‌சி உய‌ர்வு‌க்கு மு‌க்‌கிய காரண‌ம் ஆ‌ன்லை‌ன் வ‌ர்‌த்தக‌ம்: வைகோ!

திங்கள், 19 மே 2008 (11:01 IST)
விலைவாசி உயர்வுக்கு முக்கியக் காரண‌ம் ஆன்லைன் வர்த்தகம். எனவே, அதனை தடை செய்ய மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எ‌‌ன்று ம.தி.மு.க பொதுச் செயலாள‌ர் வைகோ கூ‌றினா‌ர்.

திருவாரூரில் அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌‌ட்டி‌யி‌ல், தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவது ஆளும் கட்சியின் சர்வாதிகாரப் போக்கையே வெளிப்படுத்துகிறது. இச்செயல் ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் செயல்; எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை முடக்கும் ஜனநாயக அத்துமீறல்.

தனது உறவினருக்காக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் பரிந்துரை கோரி அமைச்சர் பூங்கோதை பேசியது அதிகார மீறல். பூங்கோதை அளித்த ராஜிநாமா கடிதத்தின் மீதான நடவடிக்கை என்ன? என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும். மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தனது மகனின் நிறுவனத்துக்கு சலுகை கோரி பல்வேறு அதிகார மீறல்களை மேற்கொண்டுள்ளார். பிரதமர் இதைக் கண்டிக்காமல் இருப்பது வேதனை.

விலைவாசி உயர்வுக்கு உணவு உற்பத்திக் குறைவு தான் காரணம் எனக் கூறப்படுவது தவறு. தற்போதைய உணவு உற்பத்தி கடந்த காலங்களை விட அதிகம் என்றே புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

விலைவாசி உயர்வுக்கு முக்கியக் காரணம்- ஆன்லைன் வர்த்தகம். எனவே, ஆன்லைன் வர்த்தகத்தைத் தடை செய்ய மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ைகோ கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்