பூங்கோதை ராஜினாமாவை ஏற்கவேண்டாம்: திருமாவளவன்!

ஞாயிறு, 18 மே 2008 (11:37 IST)
அமை‌ச்ச‌ர் பூ‌ங்கோதை ரா‌ஜினாமா கடித‌த்தை முதலமை‌ச்ச‌ர் ஏ‌ற்று‌க் கொ‌ள்ள வே‌ண்ட‌ா‌ம் எ‌ன்று தொ‌ல்.‌திருமாவளவ‌ன் வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

பெர‌ம்பலூ‌ரி‌ல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொ‌ல். திருமவளவன் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், தொலைபேசி ஒட்டுகேட்பதும், ஊடகங்களில் வெளியிடுவதும் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு விரோதமானது.

அமைச்சர் பூங்கோதை பேசிய பேச்சுகள் குறித்து சுப்பிரமணியசாமி ஒரு சி.டி. வெளியிட்டதாக செய்திகள் வெளியாயின. இதைத் தொடர்ந்து ராஜினாமா கடிதத்தை அமைச்சர் பூங்கோதை, முதலமைச்சர் கருணாநிதியிடம் கொடுத்துள்ளார். இதை முதலமைச்சர் கருணாநிதி ஏற்று கொள்ள தேவை இல்லை என்று தோழமையுடன் வேண்டுகோள் விடுகிறேன்.

திருச்சியில் உள்ள ஒரு கிறிஸ்தவ மயானத்தில் தலித்துகள், தலித் அல்லாதவர்களுக்கு என்று நடுவில் தடுப்பு சுவர் எழுப்பட்டுள்ளது. இந்த சுவரை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்படும்.

15 வயது முதல் 30 வயது வரையுள்ள இளைஞர்களுக்காக 'இளம் சிறுத்தைகள் எழுச்சி பாசறை' என்ற அமைப்பு உருவாக்கப்படும் எ‌ன்று ‌தொ‌ல்.‌திருமாவளவ‌ன் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்