முத‌ல்வ‌ர் கருணாநிதி 3 நாளில் வீடு திரும்புவார்: மு.க.ஸ்டாலின்!

ஞாயிறு, 18 மே 2008 (10:59 IST)
''மூ‌ன்று நாட்களில் பூரண குணம் அடைந்து முதலமைச்சர் கருணாநிதி வீடு திரும்புவார்'' என்று அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் இல்ல திருமணம் இன்று சேல‌த்‌தி‌ல் நட‌க்‌கிறது. அதையொட்டி நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

இ‌‌ந்த ‌நி‌க‌ழ்‌ச்‌சி‌‌யி‌ல் கலந்து கொள்வதற்காக தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சேலம் வந்தார். சேலம் அஸ்தம்பட்டி விருந்தினர் மாளிகையில் அவர் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி முதுகுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் 2, 3 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டி உள்ளது. அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. இன்னும் 2, 3 நாட்களில் பூரண குணம் அடைந்து இல்லம் திரும்புவார் எ‌ன்றா‌ர் மு.க.ஸ்டாலின்.

வெப்துனியாவைப் படிக்கவும்