தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கு யோகாசனப் பயிற்சி!

புதன், 14 மே 2008 (10:51 IST)
தமிழக சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு இலவச யோகாசனப்பயிற்சி வகுப்புகளை மா‌நில அரசு அறிவித்துள்ளது.

சட்ட மன்றக் கூட்டத்தொடர் காலங்களில் காலை மாலை இரு வேளைகளிலும் உறுப்பினர்களுகு யோகா கற்றுத்தரப்படும் என்று மா‌நில இளைஞர் நல மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மை‌தீ‌ன்கான் நேற்று சட்டமன்றத்தில் அறிவித்தார்.

தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் யோகா கூட்டமைப்பு ஆகியவை யோகாசனப் பயிற்சி சேவைகளை பயன்படுத்திக் கொள்ளும் என்று அவர் தெரிவித்தார்.

ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்களுக்கு காலையிலும் மாலையிலும் ச‌ட்டம‌ன்ற விடுதியிலேயே யோகா பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.

மேலு‌ம் அவ‌ர் கூறுகையில், விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி மையங்களை உதகமண்டலம், கொடைக்கானல், ‌நீலகிரி போன்ற மலைப் பிரதேசங்களில் அமைக்கப்போவதாகவும் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்